441 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தீண்டாமை! சாதிய பாகுபாடுடன் ஆசிரியர்கள்! ஆய்வில் வெளியான தகவல்!

தமிழகத்தில் உள்ள 441 பள்ளிகளில் சாதிய பாகுபாடுகள் உள்ளது ஆய்வில் அம்பலமாகி உள்ளது.

சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கம் சார்பில் பள்ளிகளில் இருக்கும் சாதிய பாகுபாடுகள் குறித்த ஆய்வறிக்கையை வெளியிடப்பட்டது.

36 மாவட்டங்களில் உள்ள 321 அரசு பள்ளிகள், 58 அரசு உதவிபெரும் பள்ளிகள், 62 தனியார் பள்ளிகள் என 441 பள்ளிகளை சேர்ந்த 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கக்கூடிய 644 மாணவர்களை வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 50 பயிற்சிபெற்ற தன்னார்வலர்கள் 3 மாதங்கள் நடத்திய ஆய்வில், 90 சதவீதம் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்கள் கலந்துகொண்டனர்.

10 சதவீதம் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மத்தியில் நடத்தப்பட்டது. அதன்மூலம் 441 பள்ளிகளில், 39 வடிவங்களில் தீண்டாமை உள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் இடையே தீண்டாமை பார்ப்பது, தலித் மாணவரை தொடாமல் இருப்பது, தலித் மாணவர்களுக்கு தண்டனை அதிகம் தருவது உள்ளிட்ட தீண்டாமை கொடுமைகள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com