\
கிணற்றில் இருந்த சடலமாக மீட்கப்பட்ட மாணவி - கொலையா என திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணை

கிணற்றில் இருந்த சடலமாக மீட்கப்பட்ட மாணவி - கொலையா என திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணை

கிணற்றில் இருந்த சடலமாக மீட்கப்பட்ட மாணவி - கொலையா என திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணை
Published on

திருக்கழுக்குன்றம் அருகே கிணற்றில் இருந்து மாணவியின் சடலம் மீட்ட காவல்துறையினர் கொலையா? தற்கொலையா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் பிவி.களத்தூர் அருகே உள்ள கல்பட்டு என்னும் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மகள் அருணா (எ) ரோகிணி. 17 வயதான இவர், பிவி.களத்தூரில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் +2 படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து சந்தேகமடைந்த பெற்றோர் திருக்கழுகுன்றம் காவல் நிலையத்தில் தனது பெண்ணை காணவில்லை என புகார் அளித்தனர். இந்நிலையில் மூன்று நாட்கள் கழித்து அதே பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து அந்த பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் சடலத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

அதனை அடுத்து திருக்கழுக்குன்றம் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையா அல்லது தற்கொலையா என்று பல்வேறு கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com