10ம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்த +2 மாணவன்... கரூரில் அரங்கேறிய கொடூரம்!
செய்தியாளர்: கண்ணன்
பத்தாம் வகுப்பு மாணவி கழுத்து அறுக்கப்பட்டநிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த அதிர்ச்சி தரக்கூடிய சம்பவம் கரூரில் அரங்கேறியுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவி, கரூர் மாவட்டத்தில், கிருஷ்ணராயபுரம் அருகேயுள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு அதே பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவருடன் பழக்கம் ஏற்பட்டு பேசி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில்தான், நேற்று அந்த மாணவனை சந்திப்பதற்காக மாணவி சென்றநிலையில், பத்தாம் வகுப்பு மாணவி கழுத்து அறுபட்ட நிலையில் கிடந்துள்ளார் . இதனை அறிந்துகொண்ட மாணவியின் உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர் .
இந்நிலையில், இது குறித்து தகவலறிந்த பால விடுதி காவல் நிலையப் போலீசார் , இதில் தொடர்புடைய பன்னிரண்டாம் வகுப்பு மாணவனை சந்தேகத்தின் பேரில் காவல் நிலையம் அழைத்துச் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போதுவரை எந்த தகவலும் கிடைக்காதநிலையில், மாணவி மயத்தில் இருப்பதால், மயக்கம் தெளிந்த பிறகே இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.