\
மதுரையில் நீட் தேர்வு எழுதிய மாணவி உயிரிழப்பு

மதுரையில் நீட் தேர்வு எழுதிய மாணவி உயிரிழப்பு

மதுரையில் நீட் தேர்வு எழுதிய மாணவி உயிரிழப்பு
Published on

மதுரையில் நீட் நுழைவுத்தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர், பேருந்தில் ஊர் திரும்பிக்கொண்டு இருந்தபோது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பகுதியைச் சேர்ந்த முனியசாமி என்பவரின் மகள் சந்தியா. மாற்றுத்திறனாளி மாணவியான சந்தியா நீட் தேர்வு எழுதுவதற்காக மதுரைக்கு வந்துள்ளார். தனியார் பள்ளி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்வு மையத்தில் நீட் நுழைவுத்தேர்வை எழுதிவிட்டு, பேருந்தில் ஊர் திரும்பிக்கொண்டு இருந்துள்ளார். 

இந்நிலையில் திருப்புவனம் அருகே பேருந்து சென்றபோது, மாணவி சந்தியா திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக பேருந்தில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மாணவி சந்தியாவை அனுமதித்தனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாணவி சந்தியா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். நீட் தேர்வு எழுத வந்த மாற்றுத்திறனாளி மாணவி மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மதுரையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com