ஃபெங்கல் புயல்புதியதலைமுறை
தமிழ்நாடு
கிருஷ்ணகிரி | இழுத்துச் செல்லும் வெள்ள நீர்.. உயிரை பணயம் வைத்து வாகனங்களை மீட்கும் உரிமையாளர்கள்!
கிருஷ்ணகிரி மாவட்டத்தை அடுத்த ஊத்தங்கரை பகுதியில் ஃபெஞ்சல் புயலால் ஒரே நாளில் 50 செ.மீ மேல் கனமழை பெய்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தை அடுத்த ஊத்தங்கரை பகுதியில் ஃபெஞ்சல் புயலால் ஒரே நாளில் 50 செ.மீ மேல் கனமழை பெய்துள்ளது.
கடந்த 100 ஆண்டுகளுக்குப் பிறகு தற்பொழுது ஒரே நாளில் 50 செ,மி கனமழை பெய்துள்ளதாக கூறப்படுகிறது. கனமழை காரணமாக அப்பகுதியில் இருக்கும் அனைத்து ஏரிகளும் நிரம்பியது. ஏரிகளில் இருந்து வெளியேறிய உபரி நீ பெருக்கெடுத்து ஓடி சாலைகளை மூடி அப்பகுதியைத் தனித்தீவாக மாற்றியுள்ளது. இதனால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 30க்கும் மேற்பட்ட வாகனங்களை மழைநீர் இழுத்துச் சென்றது. இதனையடுத்து தங்களது வாகனங்களை உரிமையாளர்கள் மிகவும் சிரமத்துடன் மீட்டு வருகின்றனர்.