“விதி 110ன் கீழ் அதிமுக அறிவித்த திட்டங்களின் நிலை வெளியிடப்படும்” - பழனிவேல் தியாகராஜன்

“விதி 110ன் கீழ் அதிமுக அறிவித்த திட்டங்களின் நிலை வெளியிடப்படும்” - பழனிவேல் தியாகராஜன்

“விதி 110ன் கீழ் அதிமுக அறிவித்த திட்டங்களின் நிலை வெளியிடப்படும்” - பழனிவேல் தியாகராஜன்
Published on

அதிமுக ஆட்சியில் சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் செயல்படுத்தப்பட்ட மற்றும் செயல்படுத்தப்படாத திட்டம் குறித்து பேரவையில் விரைவில் அறிவிக்க உள்ளதாக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார், அதிமுக ஆட்சியில் பொருளாதார நெருக்கடியிலும் விலையில்லா திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாகவும், நிதிநிலை அறிக்கையில் பணவீக்கம் அதிகரித்துள்ளதை குறிப்பிட்டு பேசினார். அதற்கு பதிலளித்து பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இன்றைய நிலையில் உள்ள ஒரு ரூபாய்க்கான மதிப்பையும், ஐந்து ஆண்டுகளுக்கு முன் இருந்த ஒரு ரூபாய்க்கான மதிப்பையும் ஒப்பிட்டு கணக்கிடக் கூடாது எனத் தெரிவித்தார்.

மேலும், திட்டங்களுக்கு முறையாக நிதி ஒதுக்காததாலும், செயல்திறன் குறைந்ததாலும் உற்பத்தி கடன் என்பது அதிகரித்து பணவீக்கம் அதிகமாகியுள்ளதாக நிதியமைச்சர் விளக்கம் அளித்தார். எனவே, விதி 110ன் கீழ் கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அதற்கான நிதி, செயல்படுத்தப்பட்ட திட்டம் மற்றும் செயல்படுத்தப்படாத திட்டம் ஆகியவற்றை பேரவையில் விரைவில் அறிவிக்கவுள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com