\
ஊரக உள்ளாட்சி தேர்தல்: அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை

ஊரக உள்ளாட்சி தேர்தல்: அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை

ஊரக உள்ளாட்சி தேர்தல்: அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை
Published on: 
ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்த உள்ளது.
நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் இன்று காலை மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர். கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் மற்றும் வார்டு வரையறை குறித்தும் மற்ற ஏற்பாடுகள் தொடர்பாகவும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் விளக்க உள்ளனர்.
அதேநேரத்தில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான தங்களது கோரிக்கைகளை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com