தமிழ்நாடு
அரசுப் பேருந்தில் பயணியின் காதில் 'பூ' வைத்த நடத்துநர்
அரசுப் பேருந்தில் பயணியின் காதில் 'பூ' வைத்த நடத்துநர்
ஓசூரில் அரசுப் பேருந்தில் பயணித்த பயணியிடம் ஒரு கிலோ பூவுக்கு 10 ரூபாய் கட்டணமாக நடத்துநர் வசூலித்தது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அரசுப் பேருந்தில் ஒரு கிலோ பூவுடன் ஒருவர் பயணம் செய்துள்ளார். சூளகிரி பேருந்து நிலையத்தில் இருந்து ஓசூருக்கு சென்ற அரசு பேருந்தில் பயணி தன் கையில் வைத்திருந்த பிளாஸ்டிக் பைக்கு பணம் செலுத்துமாறு நடத்துனர் கட்டாயப்படுத்தியுள்ளார். அப்போது அவர் பையில் இருப்பது ஒரு கிலோ பூ என்று கூறியும், நடத்துனர் கட்டாயப்படுத்தி ஒரு கிலோ பூவிற்கு 10 ரூபாய் லக்கேஜ் வாங்கியுள்ளார்.இச்சம்பவம் பேருந்தில் பயணித்த அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.