தந்தை இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை

தந்தை இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை

தந்தை இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை
Published on

தந்தை இறந்த துக்கம் தாங்காமல் மகன் மருத்துவமனை மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆறுமுகம் என்பவர் தோல் வியாதி காரணமாக சென்னை போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மகன் பிரேம் கணேஷ் அவரை கவனித்துகொண்டிருந்தார். இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் உயிரிழந்தார். இது குறித்து வீட்டில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்த பிரேம் கணேஷ் தந்தை இறந்த துக்கம் தாங்காமல் மருத்துவமனையின் 4வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com