தமிழ்நாடு
தூத்துக்குடியில் 3வது நாளாக கடைகள் அடைப்பு - பேருந்துகள் இயங்கவில்லை
தூத்துக்குடியில் 3வது நாளாக கடைகள் அடைப்பு - பேருந்துகள் இயங்கவில்லை
தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து 3வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான பேருந்துகள் இயங்கவில்லை. பால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். மூன்றாவது நாளாக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் அசாதாரண நிலை தொடர்ந்து வருகிறது.
அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்டதாக இதுவரை 78 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். உடற்கூறு பரிசோதனை முடிந்த பின்னர் 78 பேரும் விடுவிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.