கலைவாணர் அரங்கத்தில் நிறைவு பெற்றது தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர்

கலைவாணர் அரங்கத்தில் நிறைவு பெற்றது தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர்
கலைவாணர் அரங்கத்தில் நிறைவு பெற்றது தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர்

கொரோனா அச்சம் காரணமாக 2 நாட்கள் மட்டுமே நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவுபெற்றுள்ளது.

சென்னை கலைவாணர் அரங்கில் நேற்றும் இன்றும் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவுபெற்றதையடுத்து அவையை, தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்திவைத்துள்ளார். இன்றைய கூட்டத்தொடரின்போது முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சிகள், கூட்டணி கட்சிகள் என அனைவரின் கேள்விகளுக்கும் பதிலுரை அளித்தார். மேலும் கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளிலிருந்து 3 ஆண்டுகளாக குறைக்கும் மசோதா, டிஎன்பிஎஸ்சி சட்ட திருத்த மசோதா உள்ளிட்டவை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடரான இது, நேற்று முன்தினம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியிருந்தது. இதுவரை நடந்த சட்டமனற வரலாற்றிலேயே முதன்முறையாக ஆளுநர் மிகக்குறைவான நேரம் (42 நிமிடம்) உரையாற்றியுள்ளார்.

இன்றைய கூட்டத்தின்போது அதிமுக வெளிநடப்பு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. கூட்டுறவு சங்க சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையிலிருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்திருந்தனர். கூட்டுறவு சங்க தேர்தலில் மாற்றங்களை கொண்டுவருவதற்கான மசோதாவை பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்திருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com