\
ஊருக்குள் அனுமதிக்காததால் கைகலப்பு:  ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் காவலர்கள் - வீடியோ

ஊருக்குள் அனுமதிக்காததால் கைகலப்பு: ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் காவலர்கள் - வீடியோ

ஊருக்குள் அனுமதிக்காததால் கைகலப்பு: ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் காவலர்கள் - வீடியோ
Published on

புதுச்சேரியில் விடுப்பில் இருக்கும் காவலர் ஒருவர், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஊர்காவல் படை வீரரை தாக்கும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கையாக, மூலக்குளம் அடுத்த விழுப்புரம் - புதுச்சேரி சாலை மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் விடுப்பில் இருக்கும் காவலரான அரவிந்த்ராஜ், மூலக்குளம் செல்வதற்காக அங்கு வந்துள்ளார். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த ஊர்காவல் படை வீரரான அசோக், காவலர் அரவிந்த்ராஜை ஊருக்குள் செல்ல அனுமதிக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில் திடிரென காவலர் அரவிந்த்ராஜ், அசோக்கை தாக்கினார். அதன் பின்னர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அதன் பின்பு அசோக் கொடுத்த புகாரின் பேரில் காவலர் அரவிந்த்ராஜ் மீது இரு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த ரெட்டியார்பாளையம் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். காவலர்கள் தாக்கும் காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com