பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட ரவுடி - புதுக்கோட்டை பதட்டம்

பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட ரவுடி - புதுக்கோட்டை பதட்டம்

பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட ரவுடி - புதுக்கோட்டை பதட்டம்
Published on

புதுக்கோட்டையில் ரவுடி ஒருவர் பட்டப்பகலில் ஓட ஓட ‌‌விரட்டிப்‌ படுகொலை செய்யப்பட்ட‌ சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவில்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் பாண்டி. இவர் மீது புதுக்கோட்டை, திருநெல்வேலி, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு கொலை வழக்குகளில் கைதாகி சிறையி‌ல் இருந்த சூழலில் சமீபத்தில்தான் இவர் வெளியே வந்தார். 

இந்நிலையில்‌, சுரேஷ் பாண்டி தனது நண்பர் ஆனந்துடன் இன்று காலை புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் பகுதியில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை இருச்சக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள் கத்தி மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியதாகக் கூறப்படுகிறது. 

இதில் சுரேஷ் பாண்டியன் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரைக் காப்பாற்ற முயன்ற அவரது நண்பர் ஆனந்திற்கும் அரிவாள் வெட்டு விழுந்து, ப‌டுகாயமடைந்தார். இதையடுத்து தகவலறிந்து ‌சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்த ஆனந்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி   வைத்தனர்.‌ 

மேலும் உயிரிழந்த சுரேஷ் பாண்டி உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பட்டப்பகலில் ரவுடி ஒருவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக திருக்கோகரணம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் வந்தவர்கள் கூலிப்படையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் தங்களுடைய முதல்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com