தாலிச் சங்கிலியை பறிக்க முயன்ற கொள்ளையர்கள் - போராடி மீட்ட பெண்

தாலிச் சங்கிலியை பறிக்க முயன்ற கொள்ளையர்கள் - போராடி மீட்ட பெண்
தாலிச் சங்கிலியை பறிக்க முயன்ற கொள்ளையர்கள் - போராடி மீட்ட பெண்

பூவிருந்தவல்லியில் வழிப்பறி செய்ய முயன்ற மர்ம நபர்களிடம் போராடிய பெண் ஒருவர், தங்க நகையை மீட்டுள்ளார்.

பூவிருந்தவல்லி, கந்தசாமி நகர் பிரதான சாலையில் நடந்து சென்ற சரண்யா என்ற பெண்ணிடம், இருசக்கர வாகனத்தில் வந்த வழிப்பறிக் கொள்ளையர்கள் தாலிச் சங்கிலியை அறுக்க முயற்சி செய்துள்ளனர்.

அப்போது சுதாரித்துக் கொண்ட சரண்யா, தாலிச் சங்கிலியை இறுக்கமாக பற்றியபடி கூச்சலிட்டார். இதனால் பயந்துபோன கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். தாலிச் சங்கிலியை மீட்க பெண் போராடிய காட்சி, அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இது தற்போது வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com