நீதிமன்றத்தில் சரணடைய சசிகலா சாலை வழியாகவே பெங்களூரு செல்கிறார். நீதிமன்றத்தில் சரணடைய சசிகலாவுக்கு அவகாசம் தர முடியாது, உடனடியாக சரணடைய வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து போயஸ்கார்டனில் ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் சசிகலா. பின்னர் மெரினாவில் ஜெயலலிதாவின் சமாதிக்குச் சென்ற அவர், அங்கு அவரது சமாதியில் கையால் அடித்து சபதம் ஏற்றார். பின்னர் காரில் அவர் புறப்பட்டார்.
ஸ்ரீபெரும்பதூர், ஆம்பூர், வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் சசிகலா இன்று மாலை 4 அல்லது 5 மணியளவில் பெங்களூரு சென்றடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.