தமிழக எல்லையை வந்தடைந்தது கிருஷ்ணா நதிநீர் 

தமிழக எல்லையை வந்தடைந்தது கிருஷ்ணா நதிநீர் 
தமிழக எல்லையை வந்தடைந்தது கிருஷ்ணா நதிநீர் 
 
சென்னையின் குடிநீர்த் தேவைக்காக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா நதி நீர் ஜீரோ பாய்ண்ட்டை வந்தடைந்தது.
 
சென்னையின் குடிநீர்த் தேவைக்காகத் தெலுங்கு-கங்கா ஒப்பந்தத்தின்படி தமிழகத்திற்குக் கிருஷ்ணா நதி நீர் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இறுதியில் கூட பருவத்திற்கான 8 டிஎம்சி தண்ணீரை வழங்கத் தமிழக முதல்வர் பழனிசாமி, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு கடிதம் எழுதி இருந்தார். இதே கோரிக்கையைத் தமிழக அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் நேரில் வலியுறுத்தினர். 
 
 
அதன் அடிப்படையில் கடந்த  2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்  25 ஆம் தேதி கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அணையிலிருந்து 1 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட தண்ணீர் தமிழக எல்லையான ஜீரோ பாய்ண்ட்டை வந்தடைந்தது. அதனை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் பெஞ்சமின் ஆகியோர் மலர் தூவி வரவேற்றனர்.
 
 
இந்நிலையில் இந்த ஆண்டிற்கான நீரை ஆந்திர அரசு திறந்துள்ளது.  ஆந்திராவின் கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர் தமிழக எல்லையை வந்தடைந்தது. குறிப்பாகச்  சென்னை குடிநீருக்காகத் திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர் தமிழக எல்லையான ஜீரோ பாயிண்டை வந்தடைந்ததுள்ளது. கண்டலேறு அணையில் 1,200 கன அடி நீர் திறக்கப்படும் நிலையில் தமிழக எல்லைக்கு 50 கன அடியாக நீர் வருகிறது. சென்னையில் கடுமையான கோடை வெப்பம் தாக்கி வருவதால் மக்கள் தேவையான குடிநீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.அந்தப் பற்றாக்குறையைப் போக்க இந்த நீர் பயனுள்ளதாக இருக்கும் என்பது  குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com