மதுரையில் பள்ளி மாணவிகள் மோதலில் ஈடுபட்டதற்கு இதுதான் காரணம் - விசாரணையில் வெளியான தகவல்

மதுரையில் பள்ளி மாணவிகள் மோதலில் ஈடுபட்டதற்கு இதுதான் காரணம் - விசாரணையில் வெளியான தகவல்

மதுரையில் பள்ளி மாணவிகள் மோதலில் ஈடுபட்டதற்கு இதுதான் காரணம் - விசாரணையில் வெளியான தகவல்
Published on

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் மாணவிகள் மோதிக்கொண்ட சம்பவத்திற்கு பேருந்து நிலையத்திற்குள் ஓடிப்பிடித்து விளையாடியபோது ஏற்பட்ட முன்விரோதமே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் கடந்த சனிக்கிழமை அன்று ஈ.வெ.ரா நாகம்மையார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவிகள் மாப்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளை தாக்கிய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இரு வேறு அரசுப் பள்ளி மாணவிகள் இரு குழுக்களாக மாறி மாறி தாக்கிக் கொண்டு மோதலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக இரு பள்ளி மாணவிகளிடம் இன்று மாநகராட்சி கல்வி அலுவலர் ஆதி ராமசுப்பு தலைமையிலான குழு விசாரணை நடத்தியது.

விசாரணையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக இரு பள்ளி மாணவிகளும் பெரியார் பேருந்து நிலையம் சென்றுள்ளனர். அங்கு வைத்து ஓடிப்பிடித்து விளையாடியபோது இரு பள்ளி மாணவிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அதில் ஏற்பட்ட முன்பகை காரணமாக சனிக்கிழமை இரு பள்ளியை சேர்ந்த மாணவிகளுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டு மோதலில் ஈடுபட்டு மாறி மாறி தாக்கி கொண்டதாகவும் மாநகராட்சி கல்வி அலுவலர் ஆதி ராமசுப்பு புதிய தலைமுறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் மோதலில் ஈடுபட்ட மாணவிகளின் பெற்றோர்களை வரவழைத்து விசாரணை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வரும் 5 தேதி தேர்வு துவங்க உள்ள நிலையில் அதுவரை பள்ளிக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தியுள்ள மாநகராட்சி கல்வி அலுவலர் ஆதி ராமசுப்பு தேர்வின்போது மோதலில் ஈடுபட்ட மாணவிகளின் பெற்றோர் மாணவிகளை அழைத்து வந்து தேர்வு முடிந்த பின்னர் வீட்டிற்கு அழைத்து செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com