\
ரயிலில் இழுத்துச் செல்லப்பட்ட பயணி:துரிதமாக செயல்பட்ட ரயில்வே போலீஸுக்கு குவியும் பாராட்டு

ரயிலில் இழுத்துச் செல்லப்பட்ட பயணி:துரிதமாக செயல்பட்ட ரயில்வே போலீஸுக்கு குவியும் பாராட்டு

ரயிலில் இழுத்துச் செல்லப்பட்ட பயணி:துரிதமாக செயல்பட்ட ரயில்வே போலீஸுக்கு குவியும் பாராட்டு
Published on

ஒடும் இரயிலில் ஏற முயன்ற பயணி இழுத்துச்செல்லப்பட்ட நிலையில், துரிதமாக செயல்பட்டு பயணியை பாதுகாப்பாக மீட்ட ரயில்வே போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

கோவை இரயில் நிலையத்தில் ஒடும் வண்டியில் ஏற முயற்சித்த பயணி தவறி கீழ விழுந்தார், அவரை கண்ணிமைக்கும் நேரத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த இரயில்வே போலீஸ் மீட்டார். இச்சம்பவம் குறித்து வீடியோவை ரயில்வே போலீசார் வெளியிட்டனர்.


கோவை இரயில் நிலையத்திற்கு மாலை 4.30 மணியளவில் திருவனந்தபுரத்தில் இருந்து ஹைதராபாத் செல்லும் வண்டி 3வது நடைபாதையில் வந்துள்ளது. அப்போது ஒடும் ரயிலில் பயணி ஏற முயற்சித்தபோது கால்தடுமாறி கீழே விழுந்தார், ஆனால் வண்டியின் கம்பியை பிடித்துக்கொண்டே சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்ட அவரை பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் சிரிஜித் (ஆர்பிஎப்) துரிதமாக செயல்பட்டு உயிரை காப்பாற்றினார்.
மேலும் இச்சம்பவம் குறித்து அறிந்த ரயில்வே உயர் அதிகாரிகள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலரை வெகுவாக பாராட்டினர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com