கனமழை
கனமழைpt web

தீபாவளியன்று மழை பெய்யுமா... வானிலை ஆய்வாளரின் கணிப்பு என்ன?

கடந்த சில ஆண்டுகளாக தீபாவளி அன்று தமிழகத்தில் பரவலான கனமழை என்பது பொழிந்ததில்லை. இந்நிலையில், இந்த ஆண்டு தீபாவளிக்கு மழை பெய்யுமா என்பதை பார்க்கலாம்....
Published on
Summary

கடந்த சில ஆண்டுகளாக தீபாவளி அன்று தமிழகத்தில் பரவலான கனமழை என்பது பொழிந்ததில்லை. இந்நிலையில், இந்த ஆண்டு தீபாவளிக்கு மழை பெய்யுமா என்பதை பார்க்கலாம்....

வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்கியிருக்கிறது. தீபாவளிக்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையில், சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலான கனமழை என்பது பெய்து வருகிறது. இந்நிலையில், தீபாவளியன்றும் மழைக்கு வாய்ப்பிருக்கறதா என்ற கேள்வி அனைவரும் மனதிலும் எழுந்து வருகிறது. இந்நிலையில், இந்த் கேள்விக்கு பதிலளித்து தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் பேசியிருக்கிறார்.

கனமழை
கனமழை pt web

அப்போது, தீபாவளியன்று கிழக்குத் திசை காற்றின் ஊடுருவல் இருப்பதால், கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, புதுச்சேரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் அதிகாலை 4 மணி முதல் 7 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் பெய்ய வாய்ப்பிருக்கிறது. அதேபோல, வடக்கு உள்மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள், மத்திய மாவட்டங்கள், தெற்கு உள்மாவட்டங்களில் மாலை நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. மேலும், இந்த மழை கனமழையாக இருக்க வாய்ப்பில்லை, பரவலான மிதமான மழையாகவே இருக்கும். மேலும், நல்ல வெயிலையும் தீபாவளியன்று எதிர்பார்க்கலாம் எனத் தெரிவித்தார்.

கனமழை
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை!

தொடர்ந்து, கிழக்குத் திசை காற்றின் ஊடுவல் மூலம் கடல் காற்று உள்ளே வருவதால், பட்டாசு வெடிப்பதனால் வரும் காற்றுமாசு கூட கட்டுக்குள் இருக்கும் எனத் தெரிவித்தார். மேலும், சென்னையில் தீபாவளியன்று அதிகாலை 4 மணிமுதல் 7 மணி வரை மழை பொழிய வாய்ப்பிருக்கிறது. மாலை நேரத்தில் சென்னையின் புறநகர் பகுதிகளில் மழை பொழிய வாய்ப்பிருக்கிறது எனவும் தெரிவித்திருக்கிறார்.

வங்கக்கடலில் காற்றழுத்த
தாழ்வு பகுதி
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதிweb

தொடர்ந்து, வடகிழக்கு பருவமழையின் முதல் பகுதி அக்டோபர் 23 முதல் நவம்பர் 7 வரை தீவிரமடைய இருக்கிறது. தொடர்ந்து கடந்த ஆண்டு 56 சதவீத மழை பெய்து இருக்கும் நிலையில், இந்த ஆண்டு 60 சதவீத மழை எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

கனமழை
தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,000 குறைந்து ரூ.95,600-க்கு விற்பனை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com