மருத்துவ கழிவுகளை கொட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

மருத்துவ கழிவுகளை கொட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

மருத்துவ கழிவுகளை கொட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு
Published on

கேரள மருத்துவ கழிவுகளை தமிழக பகுதியில் வந்து கொட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தேனி மாவட்டம் போடி அருகே குச்சனுரில் உள்ள தனியார் ஆசிரமத்தில் கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவ கழிவுகளை குவியல் குவியலாக கொண்டு வந்து கொட்டுவதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். காவல்துறையினர் மற்றும் வருவாய்துறையினர் விசரணை நடத்தி வருகின்றனர்.

கேரளா மநிலம் எர்ணாகுளத்தில் அமிர்தானந்தமயிக்கு சொந்தமான மருத்துவ பாரிசோதனை நிலையம் உள்ளது. அங்கிருந்து கொண்டு வரப்படும் மருத்துவ கழிவுகள் தேனி மாவட்டம் போடி அருகே  ‎குச்சனூரில் உள்ள அமிர்தனந்தமயிக்கு சொந்தமான ஆசிரமத்தில் குவியல் குவியலாக கொட்டி வைக்கப்பட்டுள்ளன. இதையறிந்த அப்பகுதிமக்கள் பீதி அடைந்து தகவல் அளித்ததின் பேரில் சின்னமனுர் காவல்துறையினர் மற்றும் குச்சனுர் கிராம நிர்வாக அலுவலர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வில் ஈடுபட்டனர். மருத்துவ கழிவுகள் என்பதை உறுதி செய்யப்பட்ட நிலையில் தேனி சுகாதார துறையில் இருந்து குப்பைகளை தோண்டி அது எந்த வகையான மருத்துவ கழிவுகள் என்று ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து அதிகாரிகளிடம் ஆசிரம நிர்வாகி கூறுகையில் 10 நாட்களுக்கு முன்பு இந்த மருத்துவ கழிவுகள் இங்கு வந்து கொட்டி வைக்கப்பட்டதாகவும் தற்பொழுது அதை அகற்றுவதற்க்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இது குறித்து சின்னமனுர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com