செயின் பறிக்க முயன்றவரை கம்பத்தில் கட்டி வைத்து உதைத்த பொதுமக்கள் !

செயின் பறிக்க முயன்றவரை கம்பத்தில் கட்டி வைத்து உதைத்த பொதுமக்கள் !
செயின் பறிக்க முயன்றவரை கம்பத்தில் கட்டி வைத்து உதைத்த பொதுமக்கள் !

சென்னை கொரட்டூரில் செயின் பறிக்க முயன்ற வாலிபரை துரத்திப்பிடித்த பொதுமக்கள் கம்பத்தில் கட்டி வைத்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொரட்டூர்  அக்ராகரம்  பகுதியில் வீட்டின் முன்பு நின்று கொண்டு இருந்த சரோஜா என்ற மூதட்டியிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் தங்க சங்கலியை பறித்தனர். இதில் சரோஜா மயக்கமானார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் வாகனத்தில் சென்றவர்களை துரத்தி சென்றனர். இதில்  பின்னால் அமர்ந்து இருந்த நபரை பிடித்தனர். மற்றொருவர் தப்பி சென்றார். இதனை தொடர்ந்து பிடித்த அந்த நபரை அப்பகுதி மக்கள் மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தனர். 

பின்னர் சம்பவம் குறித்து தகவல் அறிந்த   காவல்துறையினர் பிடிப்பட்ட நபரை மீட்டு கொரட்டூர் காவல் நிலையம் அழைத்து சென்றனர். பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில்  பிடிப்பட்ட நபர் தண்டையார் பேட்டையை சேர்ந்த ராஜசேகர் என்பது தெரிய வந்தது. மேலும் அவர் அளித்த தகவலில் அவருடன் வந்த மற்றொருவர் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பது தெரிய வந்தது. இதையடுத்து கார்த்திக்கை கைது காவல்துறையினர் இருவரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com