உதவி ஜெயிலர் குடும்பத்தை பழி தீர்க்க உதவிசெய்த சிறைத்துறை காவலர்! உண்மை அம்பலமானது எப்படி?

உதவி ஜெயிலர் குடும்பத்தை பழி தீர்க்க உதவிசெய்த சிறைத்துறை காவலர்! உண்மை அம்பலமானது எப்படி?
உதவி ஜெயிலர் குடும்பத்தை பழி தீர்க்க உதவிசெய்த சிறைத்துறை காவலர்! உண்மை அம்பலமானது எப்படி?

கடலூர் மத்திய சிறையில் உதவி ஜெயிலர் குடும்பத்தை பழித்தீர்க்க சிறைத்துறை காவலரே உதவி செய்திருக்கும் அதிர்ச்சி தகவல் தற்போது அம்பலமாகியுள்ளது.

கடலூர் மத்திய சிறைச்சாலையில் உதவி ஜெயிலராக பணியாற்றி வருபவர் மணிகண்டன். இவர் கடலூர் மத்திய சிறைச்சாலை அருகே உள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார். கடந்த மாதம் 28 ஆம் தேதி இரவு இவரது வீட்டின் சமையலறை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் உதவி ஜெயிலர் மணிகண்டன் மற்றும் அவரது குடும்பத்தினர் நல்வாய்பாக தப்பி வெளியேறினர்.

இது சம்பந்தமாக உதவி ஜெயிலர் மணிகண்டன் மனைவி கொடுத்த புகார் அடிப்படையில் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சம்பவ இடத்தில் வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு விசாரணையை தீவிரபடுத்தினர். இதில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் சிறை அருகே செல்போன் பயன்படுத்திய நபர்கள் குறித்து போலீசார் பல்வேறு விதமான தகவல்களை திரட்டினர்.

இந்நிலையில் கடலூர் மத்திய சிறைச்சாலையில் தலைமைக் காவலராக பணியாற்றும் செந்தில்குமார் என்பவரையும் சென்னையை சேர்ந்த தினேஷ் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். முன்னதாக சிறைச்சாலையில் ரவுடி எண்ணூர் தனசேகர் என்பவர் சிறையில் இருந்து செல்போன் மூலமாக பல்வேறு குற்றச் செயல்களை செய்து வந்துள்ளார். இது சம்பந்தமாக கடந்த மாதம் எண்ணூர் தனசேகரிடம் இருந்து உதவி ஜெயிலர் மணிகண்டன் செல்போனை பறிமுதல் செய்துள்ளார்.

இதில் எண்ணூர் தனசேகருக்கும் உதவி ஜெயிலர் மணிகண்டனுக்கும் பகை ஏற்பட்டுள்ளது. இதனால் எண்ணூர் தனசேகரன் மணிகண்டனை பழிவாங்கும் நோக்கில் சிறையில் இருந்தபடியே திட்டம் ஒன்றை தீட்டியுள்ளார். சிறையில் பணியாற்றும் தலைமைக் காவலர் செந்தில்குமார் என்பவர் உதவியுடன் சென்னையை சேர்ந்த தினேஷ் என்பவரும் மணிகண்டன் குடும்பத்தை கொலை செய்ய வீட்டில் பெட்ரோல் ஊற்றி எரித்தது தெரிய வந்தது.

இதனையடுத்து மத்திய சிறைச்சாலையில் தலைமைக் காவலராக இருக்கும் செந்தில்குமார் என்பவரையும் சென்னையை சேர்ந்த தினேஷ் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். உதவி ஜெயிலரை கொலைச் செய்ய உதவி செய்த சிறைத்துறை தலைமைக் காவலரும் இந்த வழக்கில் சிக்கியது காவல்துறை வட்டாரத்திலும் சிறைத்துறை வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com