தமிழகம் முழுவதும் முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளி வளாகங்களில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முதல் தவணையாக வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் 43ஆயிரத்து 51 சொட்டு மருந்து மையங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சிக்குப்பட்ட பகுதிகளில் மட்டும் 5 வயதிற்குட்பட்ட சுமார் 7 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்கு 1,640 சொட்டு மருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முகாம் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போலியோ சொட்டு மருந்து முகாம்கள் தமிழகத்தில் சிறப்பாக நடைபெறுவதால், தமிழ்நாடு 14ஆவது வருடமாக போலியோ இல்லாத நிலையை அடைந்துள்ளதாக, தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.