பறிமுதல் செய்யப்பட்ட லாரியில் இருந்து டீசல் திருடிய சப்-இன்ஸ்பெக்டர்: சிசிடிவி காட்சி

பறிமுதல் செய்யப்பட்ட லாரியில் இருந்து டீசல் திருடிய சப்-இன்ஸ்பெக்டர்: சிசிடிவி காட்சி

பறிமுதல் செய்யப்பட்ட லாரியில் இருந்து டீசல் திருடிய சப்-இன்ஸ்பெக்டர்: சிசிடிவி காட்சி
Published on

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மணல் அள்ளியதாக பறிமுதல் செய்யப்பட்ட லாரியில் இருந்து டீசல் மற்றும் பேட்டரியை உதவி ஆய்வாளர் திருடும் காட்சி வெளியாகியுள்ளது. 

திருக்கழுக்குன்றம் பகுதியில் உள்ள பாலாற்றில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லாரியில் மணல் திருடியதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் திருக்கழுக்குன்றம் காவலர்கள் 3 லாரிகளை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்தனர். இந்நிலையில் திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் என்பவர் பணி முடிந்து இரவு நேரத்தில் செல்லும்போது, பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தப்பட்டிருந்த லாரியில் இருந்து டீசல் மற்றும் பேட்டரியை தனது நண்பர் உதவியுடன் திருடிச் சென்றுள்ளார். அந்தக் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. 

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை நேரடியாக நீதிமன்றத்தில் மட்டுமே ஒப்படைக்க வேண்டும். அதில் இருந்து எந்த ஒரு பாகத்தையோ பொருளையோ காவலர்கள் எடுப்பதற்கு உரிமை கிடையாது. அவ்வாறிருக்க காவல் உதவி ஆய்வாளர் அப்பட்டமாக இரவு நேரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட லாரியில் பொருட்களை திருடுவது காவலர்கள் மத்தியில் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுகுறித்து மகாபலிபுரம் துணை காவல் கண்காணிப்பாளரிடம் கேட்கபோது இது தொடர்பாக உரிய விசாரணை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார் 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com