\
காவல்துறை அதிரடி : விடிய விடிய நடந்த சோதனை 94 பேர் கைது

காவல்துறை அதிரடி : விடிய விடிய நடந்த சோதனை 94 பேர் கைது

காவல்துறை அதிரடி : விடிய விடிய நடந்த சோதனை 94 பேர் கைது
Published on

சென்னை அருகே மீஞ்சூரில் ரவுடிகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து விடிய விடிய நடத்திய சோதனையில் 13 ரவுடிகள் உட்பட 94 பேர் கைது.

சென்னையின் புறநகர் பகுதியான மீஞ்சூரில் இரவு முழுவதும் விடிய விடிய போலீசார் நடத்திய சோதனையில் 94 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் ரவுடிகள்  புறநகர் பகுதிகளில் பதுங்கி இருப்பதாக மாவட்ட எஸ்பி சிபி.சக்கரவர்த்திக்கு வந்த தகவலையடுத்து, மீஞ்சூர் பகுதியில் நேற்றிரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை விடிய விடிய சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் 1 ஒரு எஸ்பி, 1 ஏடிஎஸ்பி, 4 டிஎஸ்பி, 7 இன்ஸ்பெக்டர்கள், 212 காவலர்கள் என 5 குழுக்களாக பிரிக்கப்பட்டு, வல்லூர், பட்டமந்திரி, வடசென்னை அனல் மின் நிலையம், மணலி என சென்னையின் புறநகர் பகுதிகளில்  இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில் சந்தேகத்திற்கு இடமான 94 பேர் கைது செய்யப்பட்டனர்.இவர்களிடம் கிரிமினல் கிரைம் டிராக்கிங் நெட்வொர்க் என்ற சோதனையின் அடிப்படையில் விசாரணை செய்யப்பட்டது. அதில், 13 பேர் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி என குற்றச்செயல்களில் ஈடுபட்டது. அவர்களில் தனுஷ், சோபன்பாபு,சூர்யா என 13 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.மற்றவர்களிடம் கிரிமினல் கிரைம் டிராக்கிங் நெட்வொர்க் சோதனை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com