புகாரை விசாரிக்க சென்ற காவல் அதிகாரியே சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த கொடூரம் ?

புகாரை விசாரிக்க சென்ற காவல் அதிகாரியே சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த கொடூரம் ?

புகாரை விசாரிக்க சென்ற காவல் அதிகாரியே சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த கொடூரம் ?
Published on

திருவள்ளூர் அருகே 17 வயது மகளை, இரண்டாவது கணவர் பாலியல் தொந்தரவு செய்வதாக கொடுத்த புகாரின் பேரில் விசாரணை செய்த காவல் ஆய்வாளரும் பாலியல் தொந்தரவு செய்ததாக திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம் புழல் அடுத்த சூரப்பட்டு பகுதியில் வசித்து வருபவர் ராதிகா. இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் மற்றும் ஒரு மகனும் உள்ளனர். இந்தச் சூழலில் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை விவாகரத்து செய்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் ராதிகா கடந்த 2017 நவம்பர் மாதம் ஜெய்கரன் என்ற தொழிலதிபரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். ஆன்லைன் வியாபாரம் செய்துவந்த ஜெய்கரனிடம் வேலை காரணமாக சென்ற போது, ஏற்பட்ட பழக்கத்தில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் முதல் கணவர் மூலம் ராதிகாவுக்கு பிறந்த குழந்தைக்கு இரண்டாவது கணவர் ஜெய்கரன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும்,முதல் கணவர் மூலம் பிரச்னை ஏற்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக ராதிகா புழல் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், அந்தப் பெண்ணை விசாரணைக்கு அழைத்துச் சென்ற காவல் ஆய்வாளர் நடராஜன், தனது 17 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாகவும் கூறப்படுகிறது. 

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான ராதிகா தனது 17 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தனது இரண்டாவது கணவர் ஜெய்கரன் மற்றும் புழல் காவல் ஆய்வாளர் நடராஜன் ஆகிய இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.  

இதனிடையே இது குறித்து புழல் காவல் நிலையத்தில் ஆய்வாளர் மீது வழக்கறிஞர் மூலம் புகார் கொடுத்தும் வழக்கைப் பதிவு செய்யாமல் அலைக்கழித்ததாக ராதிகா புகார் தெரிவிக்கின்றார். இரண்டாவது கணவர் பாலியல் தொந்தரவு செய்வதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் புகாரை விசாரிக்க வேண்டிய காவல் ஆய்வாளரும் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நீதிமன்றத்தில் தாயும் மகளும் மனுத்தாக்கல் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புகார் கூறப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் நடராஜன், தேர்தலுக்காக தற்போது பழவந்தாங்கல் காவல் ஆய்வாளராகப்  பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com