"அந்த இன்ஸ்பெக்டரை 24 மணி நேரத்தில் பணியிட மாற்றம் செய்ய வேண்டும்”- ஹெச்.ராஜா

"அந்த இன்ஸ்பெக்டரை 24 மணி நேரத்தில் பணியிட மாற்றம் செய்ய வேண்டும்”- ஹெச்.ராஜா
"அந்த இன்ஸ்பெக்டரை 24 மணி நேரத்தில் பணியிட மாற்றம் செய்ய வேண்டும்”- ஹெச்.ராஜா

கிருஷ்ண ஜெயந்தி விழா நடத்த அனுமதி மறுத்த காவல் ஆய்வாளர் பணியிடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் ஹெச்.ராஜா.

கிருஷ்ண ஜெயந்தி நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்த வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜா, 24 மணி நேரத்தில் பணியிடம் மாற்றப்பட வேண்டும் எனவும், நாளை திட்டமிட்ட இடத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெறும் எனவும் ராஜபாளையத்திற்கு வருகை தந்த பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். ஆனால் இவரது குற்றச்சாட்டு ஆதாரமற்றது என காவல் ஆய்வாளர் ராஜா தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூருக்கு வருகை தந்த பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா, ராஜபாளையத்தில் உள்ள ஆதரவாளர்களை சந்தித்தார். ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொன்விழா மைதானம் அருகே அவருக்கு ஆதரவாளர்கள் பொன்னாடை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

கட்சி நிர்வாகிகளிடம் கலந்துரையாடிய பின்னர், ஹெச். ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார், அதில், விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பாக நாளை கிருஷ்ண ஜெயந்தி நிகழ்ச்சி பொன்விழா மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சி நடத்துவதற்கு வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜா அனுமதி மறுத்துள்ளார்.

இது கண்டனத்திற்கு உரியது. போன வாரம் சுதந்திர தினத்தன்று கருப்புக்கொடி ஏற்றிய ஈவேரா குழுவினரான வீரமணி, கூட்டம் நடத்த இங்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் கிறிஸ்தவ மத கூட்டம் நடத்த வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜா அனுமதி அளித்துள்ளார். அதேபோல் சிஏஏ கூட்டம் சட்டவிரோதமாக நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பின்னர் சிஎஸ்ஐ ஆட்சி நடைபெற்று வருகிறது. நமது டிஜிபி, நடராஜ பெருமானை இழிவாக பேசிய யூடியூப் ரூட்டஸ் டிவி சேனல் மைனர் விஜய் கைது செய்யப்படவில்லை. ஆனால் ஸ்ரீரங்கத்தில் இருக்கிற ஈவேரா சிலைக்கு விரோதமாக கருத்து தெரிவித்த கனல் கண்ணனை கைது செய்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் காவல்துறை அனைத்தும் ஆன்ட்டி ஹிந்து போர்ஸாக மாறிவிட்டது என்று தெரிவித்தார்.

மேலும் ராஜபாளையத்தில் ஆய்வாளர் ராஜா நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது.  அவர் 24 மணி நேரத்தில் பணியிடம் மாற்றப்பட வேண்டும். அதேபோல் திட்டமிட்டபடி, திட்டமிட்ட இடத்தில் நாளை கிருஷ்ண ஜெயந்தி நடைபெறும் என காட்டமாக தெரிவித்தார்.

இது குறித்து வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜா பேசுகையில், பொன்விழா மைதானம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இஸ்லாமியர்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க நிகழ்ச்சியை வேறு இடத்தில் நடத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது. மேலும் மாலை அணிந்திருந்த இந்துவின் மாலையை நான் அறுத்ததாக கூறுவது ஆதாரம் அற்ற குற்றச்சாட்டு என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com