சென்னை காவல் துறைக்கு உட்பட்ட ஆயுதப்படையை சேர்ந்த குதிரை ஒன்று பணி முடிந்து திரும்பிய போது அண்ணா சாலை நடுவே மயங்கி விழுந்து உயிரிழந்தது.
விநாயகர் சிலைகள் மெரினா கடற்கரையில் கரைக்கப்பட்டதை அடுத்து காலையிலிருந்து ரோந்துப் பணியில் ஈடுபட்ட நிலையில் சோர்வு காரணமாக குதிரை மயங்கி விழுந்தது தெரியவந்துள்ளது. உணவு, ஓய்வு, போதிய பராமரிப்பு இல்லாததால்தான் குதிரை பலவீனமாகி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. சாலையின் நடுவே மயங்கி விழுந்த குதிரைக்கு சிகிச்சை அளிக்க ஆளில்லாமல் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் கேட்பாரற்று கிடந்தது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை மருத்துவர்கள் குதிரைக்கு சிகிச்சை அளித்து அங்கிருந்து மீட்டுச் சென்றனர். ஆனாலும், அந்தக் குதிரை உயிரிழந்தது.