\
ஜவாஹிருல்லா-ஹைதர் அலி ஆதரவாளர்கள் மோதல்: 20-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு

ஜவாஹிருல்லா-ஹைதர் அலி ஆதரவாளர்கள் மோதல்: 20-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு

ஜவாஹிருல்லா-ஹைதர் அலி ஆதரவாளர்கள் மோதல்: 20-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு
Published on

ஜவாஹிருல்லா ஆதரவாளர்களுக்கும், ஹைதர் அலி ஆதரவாளர்களுக்குமிடையே மோதல் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மண்ணடியில், தங்கள் அலுவலகத்துக்கு வந்து தாக்குதல் நடத்தப்பட்டதாக தமுமுக மத்திய சென்னை மாவட்டத்தலைவர் மீரான் அளித்த புகாரின்பேரில், ஜவாஹிருல்லா ஆதரவாளர்கள் 20-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்புகாரின்பேரில், மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்த சாகுல், ஹாஜி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சாகுலின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஹாஜி மட்டும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதேபோல, மனித நேய மக்கள் கட்சி நிர்வாகி அப்துல் மஜித் வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் அளித்த புகாரில் 20க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ப்பட்டுள்ளது. மோதல் கல்வீச்சில் வடக்கு கடற்கரை காவல் நிலைய காவலர் அருண்குமார் காயமடைந்த நிலையில், 20க்கும் அதிகமானோர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com