“காவல் ஆய்வாளர் கொடுமை தாங்க முடியவில்லை” - காவலர் எழுதிய தற்கொலைக் கடிதம்

“காவல் ஆய்வாளர் கொடுமை தாங்க முடியவில்லை” - காவலர் எழுதிய தற்கொலைக் கடிதம்
“காவல் ஆய்வாளர் கொடுமை தாங்க முடியவில்லை” - காவலர் எழுதிய தற்கொலைக் கடிதம்

சென்னை வளசரவாக்கம் காவல் ஆய்வாளர் கொடுமை தாங்க முடியாமல் காவலர் ஒருவர் தற்கொலை செய்துக் கொள்ள போவதாக உயரதிகாரிகளுக்கு எழுதியக் கடிதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் காவலர் பொன்லிங்கம். இவர் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் வளசரவாக்கம் காவல் ஆய்வாளர் கௌதமன் கொடுமை தாங்க முடியாமல், தான் தற்கொலை செய்துக் கொள்ள போவதாக உயரதிகாரிகளுக்கு எழுதியதாகக் கூறப்படும் கடிதம் நேற்று முதல் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இது குறித்து அவர் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு காவலர் பொன்லிங்கம் எழுதியக் கடிதத்தில், ஆய்வாளர் கௌதமன் மரியாதை இல்லாமல் தரக்குறைவாக நடத்துவதாகவும், தனக்கு உரிய நேரத்தில் விடுமுறை அளிக்காததால், தனது தாய் உயிழந்ததாகவும், அவரின் மறைவுக்கு கௌதமன் தான் காரணம் எனவும் தனக்கு வந்த பணி மாறுதலுக்கு பதிலளிக்காமல் அவதூறாக பேசிகிறார் என்றும் எனவே நான் மன உளைச்சல் தாங்காமல் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்றும் அதற்கு காரணம் ஆய்வாளர் கௌதமன்தான் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் அக்கடிதம் காவல்துறை உயர் அதிகாரிகளின் பார்வைக்கு சென்றுள்ளது. பின்னர் காவலர் பொன்லிங்கத்தை காவல்துறை அதிகாரிகள் அழைத்துப் பேசி ராயலா நகர் காவல் நிலைய பணியிலிருந்து விடுவித்து, திருநெல்வேலி மாவட்டத்திற்கு பணி மாறுதல் கொடுத்து அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே காவல் ஆய்வாளர் கௌதமன் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து காவல்துறை உயர்அதிகாரிகள் ஆலோசனை செய்வதாகவும், விரைவில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தகவல் தெரிய வந்துள்ளது.

ஆய்வாளர் ஒருவர் தனக்கு விடுமுறை அளிக்காமலும் பனி மாறுதலுக்கு அனுப்பாமலும் இருந்ததற்கு, தற்கொலை செய்துக் கொள்ள போவதாக காவலர் எழுதியக் கடிதம் காவல்துறையினர் மட்டுமன்றி பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com