மனநலம் பாதிக்கப்பட்டவரை சுத்தப்படுத்திய காவலர் : வைரல் வீடியோ
முதல்நிலை காவலர் ஒருவர், மனநலம் பாதிக்கப்பட்டவரை சுத்தப்படுத்தி புத்தாடை அணிவித்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி, பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை செல்வபுரம் காவல்நிலையத்தில் முதல்நிலை காவலராக பணிபுரிபவர் பிரதீப். இவர் பேரூர் ரோடு வாய்க்காப்பாலம் அருகே உள்ள சோதனைச்சாவடி அருகே பணியில் இருந்த போது, மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் அப்பகுதியில் சுற்றித் திரிந்துள்ளார். அந்த நபரை தனது பணியின் இடையில் நல்ல முறையில் சுத்தம் செய்து புத்தாடை அணிவித்து அனுப்பி வைத்தது உள்ளார் பிரதீப்.
இதனிடையே அச்சம்பவத்தை வீடியோ பதிவு செய்து, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. காவலர் பிரதீப்பின் இந்தச் செயல்பாடு பாராட்டும் வண்ணம் அமைந்துள்ளது. காவலர் ஒருவர் மனநோயாளிக்கு முடிதிருத்தம் செய்து அவரை சுத்தப்படுத்தி புத்தாடை வழங்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.