முதல்வரின் வீட்டின் நடைபாதை அருகே பிச்சைக்காரரைப் போல் நடித்த கொள்ளையன் !

முதல்வரின் வீட்டின் நடைபாதை அருகே பிச்சைக்காரரைப் போல் நடித்த கொள்ளையன் !

முதல்வரின் வீட்டின் நடைபாதை அருகே பிச்சைக்காரரைப் போல் நடித்த கொள்ளையன் !
Published on

காவல்துறையினரிடம் இருந்து தப்பிப்பதற்காக முதல்வரின் வீடு அருகே உள்ள நடைபாதையில் பிச்சைக்காரன் போல் நடித்த கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் முதல்வரின் இல்லம் அமைந்துள்ள பசுமை வழிச்சாலை தான், தமிழகத்திலே பாதுகாப்பு அதிகமுள்ள பகுதி. பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகம் இருக்கும் அந்த இடத்திலேயே, பெண்கள் தங்கும் விடுதியில் ஒரு கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. பசுமை வழிச்சாலையில் உள்ள பெண்கள் தங்கும் விடுதியில், திங்கள்கிழமை இரவு வழக்கம்போல் கதவுகள் மூடப்பட்டன. சரியான அந்த நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்த அந்த இளைஞர், முகமூடி அணிந்து கொண்டு சத்தமின்றி உள்ளே நுழைகிறார். அங்கிருந்த அறையில் வைக்கப்பட்டிருந்த 80 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடியதோடு, தூங்கிக் கொண்டிருந்த பெண்களிடம் பாலியல் தொல்லையும் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில் பெண்கள் கூச்சலிட்டதால் பதற்றமடைந்த அந்த கொள்ளையன், அங்கிருந்து தப்பியோட முற்பட்டார். அப்போது விடுதியில் இருந்து வெளியே வந்த அதே நேரத்தில், எதிரே காவல்துறையினர் ரோந்து வாகனம் வந்துள்ளது. திருடிய பணப் பை கையில் இருந்ததால், காவலர்களின் பார்வையில் படாமல் தப்பிக்க நினைத்து, சாலையோரம் உள்ள நடைபாதையில் சட்டென படுத்துக் கொண்டு பிச்சைக்காரரைப் போல் நடித்துள்ளார். 

அப்போது நள்ளிரவில் நடைபாதையில் தன்னந்தனியாய் இளைஞர் ஒருவர் படுத்துக் கொண்டிருப்பதைக் கண்ட காவலர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் அவர் வைத்திருந்த பையில் 80 ஆயிரம் ரூபாய் இருப்பது தெரியவந்ததால், காவலர்களின் சந்தேகம் மேலும் வலுத்தது. அதன்பின்னர் விசாரணையை தீவிரப்படுத்தியபோது பெண்கள் விடுதியில் நடந்த கொள்ளை சம்பவம் காவலர்களுக்கு தெரியவந்தது. இதனையடுத்து சிசிடிவி காட்சியின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினர், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது அதே பகுதியைச் சேர்ந்த சரத் என்பது தெரியவந்தது. பின் சரத்தை கைது செய்த காவலர்கள், அவருக்கு வேறு ஏதேனும் கொள்ளை சம்பவங்களில் தொடர்பு உள்ளதா என விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com