சாலையில் கிடந்த ரூ. 40 ஆயிரத்தை உரியவரிடம் ஒப்படைத்த காவலர் 

சாலையில் கிடந்த ரூ. 40 ஆயிரத்தை உரியவரிடம் ஒப்படைத்த காவலர் 

சாலையில் கிடந்த ரூ. 40 ஆயிரத்தை உரியவரிடம் ஒப்படைத்த காவலர் 
Published on
 
சாலையில் தவறவிட்ட 40ஆயிரம் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த காவலருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றது.
 
மதுரை வடக்கு ஆவணி மூல வீதி பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ் குமார்.  இவர் அந்தப் பகுதியில் அழகு சாதன உபகரணங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இதனிடையே முகேஷ் அதே பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிர்பாராத விதமாகத் தனது பையில் வைத்திருந்த ரூ. 40,000 பணத்தைத் தவிர விட்டுள்ளார்.
 
இந்நிலையில் அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியிலிருந்து வந்த மதுரை விளாங்குடி பகுதியைச் சேர்ந்த ஊர்க்காவல் படை காவலர் விக்னேஷ்வரன் என்பவர் அந்தப் பணத்தை எடுத்து உரியவரிடம் காவல் ஆய்வாளர் முன்னிலையில் ஒப்படைத்துள்ளார். ஊரடங்கு காலத்தில் பலரும் அன்றாட தேவைக்கே பணம் இல்லாமல் தவித்துவரும் வேளையில் சாலையில் எடுத்த பணத்தைக் காவலர் ஒருவர் ஒப்படைத்துள்ள செய்தி அந்தப் பகுதியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆகவே சாலையில் தவறவிட்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த ஊர்க்காவல் படை காவலரைப் பலரும் பாராட்டி வருகின்றனர். 
 
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com