பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததாக வாலிபர் கைது
பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததாக சந்தோஷ் என்ற வாலிபரை பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள ஒக்கநாடு கீழையூர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்(25). இவர் சத்யா பெண்ணை திருமணம் செய்து திருப்பூரில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், திடீரென கணவர் காணமல் போனதாக மனைவி சத்யா திருப்பூர் மத்திய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது சந்தோஷ் திருப்பூரை சேர்ந்த சசிகலா என்பவரை திருமணம் செய்து கொண்டு தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் வசித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் உடனடியாக சந்தோஷை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சந்தோஷ் ஏற்னவே பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார் என்பது தெரியவதுள்ளதாக போலீசார் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.