தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமிக்கு வாட்ஸ்அப்பில் ஆபாச வீடியோ அனுப்பியவர் கைது செய்யப்பட்டார்.
தமிழர் முன்னேற்றப் படை அமைப்பின் தலைவர் கி.வீரலட்சுமிக்கு கடந்த மார்ச் மாதம் வாட்ஸ்அப் எண்ணில் ஆபாச வீடியோக்கள் வந்துள்ளது. இது தொடர்பாக சங்கர் நகர் காவல் நிலையத்தில் மார்ச் மாதம் புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் இவரது வாட்ஸ்அப் எண்ணுக்கு ஆபாச வீடியோ மீண்டும் வந்துள்ளது. இதையடுத்து ஆபாச படம் அனுப்பிய நபர்களை சரணடைய சொல்லி கி.வீரலட்சுமி கத்தியை காட்டி மிரட்டி வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், வீரலட்சுமிக்கு வாட்ஸ்அப்பில் ஆபாச வீடியோ அனுப்பியவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரியலூர் ஆண்டிமடத்தை சேர்ந்த டிரில்லிங் மெஷின் ஆபரேட்டர் ஆரோக்கியசாமி (வயது 38) கேரளாவில் கைது செய்யப்பட்டார்.