மக்களின் மகிழ்ச்சி வெள்ளத்தில் பிறந்தது 2024! நல்ல எதிர்காலம் நோக்கி புத்தாண்டை வரவேற்ற உலகநாடுகள்!

இனிமையான மற்றும் எதிர்பாராத பல நிகழ்வுகளால் பல்வேறு அனுபவங்களை வழங்கிய 2023ஆம் ஆண்டு முடிவுக்கு வந்து 2024 புத்தாண்டு பிறந்துள்ளது. ஆரோக்கியமான எதிர்காலத்தை நோக்கி உலக மக்கள் மகிழ்ச்சியோடு 2024-ஐ வானவேடிக்கையுடன் வரவேற்றுள்ளனர்.
புத்தாண்டு கொண்டாட்டம்
புத்தாண்டு கொண்டாட்டம்PT

உலகத்தின் முதல் பகுதியாக 2024ஆம் ஆண்டை வரவேற்றது கிறிஸ்துமஸ் தீவுகள்... ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டை முதலாவதாக வரவேற்கு கிறிஸ்துமஸ் தீவுகள் இந்தாண்டும் உற்சாகமாக வரவேற்றது.

கிறிஸ்துமஸ் தீவை தொடர்ந்து நியூஸிலாந்தில் பிறந்தது 2024 புத்தாண்டு. வாண வேடிக்கையுடன் புத்தாண்டை வரவேற்ற பொதுமக்கள் ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.

புத்தாண்டு கொண்டாட்டம்
புத்தாண்டு கொண்டாட்டம்

இதனை தொடர்ந்து பிஜி தீவிலும் புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பின்னர் ஆஸ்திரேலியாவின் சிட்னி, மெல்போர்ன் நகரில் புத்தாண்டு பிறந்தது. இதனை அங்குள்ள மக்கள் வாணவேடிக்கைகள் வெடித்தும், ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளையும் கூறியும் உற்சாகமாக கொண்டாடினர். இந்நிலையில் விரைவில் இந்தியாவில் புத்தாண்டை வரவேற்க நாட்டு மக்கள் மகிழ்ச்சியோடு காத்திருக்கின்றனர்.

புத்தாண்டையொட்டி கலைகட்டும் பெசண்ட் நகர் மற்றும் மெரினா!

2023ஆம் ஆண்டை அனுப்பி வைத்து 2024 புதிய ஆண்டை வரவேற்கும் வகையில், சென்னை, கோயம்புத்தூர், மதுரை முதலிய பல்வேறு நகரங்களில் கூடியிருந்த தமிழக மக்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்தையும், அன்பையும் பறிமாறி புத்தாண்டை வரவேற்றனர்.

புத்தாண்டு கொண்டாட்டம்
புத்தாண்டு கொண்டாட்டம்

சென்னையில் பெசண்ட் நகர் மற்றும் மெரினா கடற்கரையில் மக்கள் கூடி வானவேடிக்கைகளுடன் மகிழ்ச்சியாக புத்தாண்டை வரவேற்றனர். தூங்கா நகரம் மதுரையில் புத்தாண்டை வரவேற்கும் வகையில் புத்தகக்காட்சி நடத்தப்பட்டது. கலைநிகழ்ச்சிகளுடன், வானவேடிக்கைகளுடன் 2024ஆம் ஆண்டை தமிழக மக்கள் வரவேற்றனர்.

புத்தாண்டுக்காக ஜொலிக்கும் புதுடில்லி!

தலைநகர் டெல்லியில் பொதுமக்கள் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர். மக்களின் கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெறுவதற்காக காவல் துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

புத்தாண்டு கொண்டாட்டம்
புத்தாண்டு கொண்டாட்டம்

அன்சல் பிளாசா, லஜ்பத் நகர், கன்னாட் பிளேஸ், பாலிகா பஜார், காந்தி நகர் மார்க்கெட் உள்ளிட்ட12 பகுதிகளி காவல்துறையினர் அதிதீவிர கண்காணிப்பின் கீழ் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கலைக்கட்டின.

பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்த தமிழக முதலமைச்சர்!

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, தமிழக மக்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில்,, “புதிய சிந்தனை, புதிய இலக்குகளுக்கான வாசலைத் திறந்துவைத்து நம்பிக்கையின்ஒளிக்கதிர்களுடன் இந்த புத்தாண்டு பிறப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

mk stalin
mk stalin

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் வழியில், சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதிக்கான பயணத்தில் எத்தனை தடைகள் எதிர்ப்பட்டாலும், அவற்றைத் தகர்த்தெறிந்து முன்னேறும் திராவிட மாடல் அரசின் வெற்றிப் பயணம், இந்த புத்தாண்டில் புதிய சாதனை உச்சங்களை தொடும்” என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

2024 புத்தாண்டு கொண்டாட்டம்
2024 புத்தாண்டு கொண்டாட்டம்

பல்வேறு அனுபவங்களை தந்து, இன்ப துன்பங்களை பகிர்ந்து 2023ஆம் ஆண்டு முடிவுக்கு வந்துள்ளது. எல்லோருக்கும் 2024ஆம் ஆண்டுக்கான இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com