\
தமிழகம் முழுவதும் சேதமடைந்த 20,453 குடியிருப்புகளை இடிக்க வல்லுநர் குழு பரிந்துரை

தமிழகம் முழுவதும் சேதமடைந்த 20,453 குடியிருப்புகளை இடிக்க வல்லுநர் குழு பரிந்துரை

தமிழகம் முழுவதும் சேதமடைந்த 20,453 குடியிருப்புகளை இடிக்க வல்லுநர் குழு பரிந்துரை
Published on: 

தமிழகம் முழுவதும் சேதமடைந்த 20 ஆயிரத்து 453 குடியிருப்புகளை இடிக்க தொழில்நுட்ப வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது.

சென்னையை அடுத்த திருவொற்றியூரில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு இடிந்து விழுந்ததால், மாநிலம் முழுவதும் உள்ள குடியிருப்புகளை, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. 25 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள 22 ஆயிரத்து 271 குடியிருப்புகளில் அண்ணா பல்கலைக்கழக தொழில்நுட்ப வல்லுநர் குழு ஆய்வு மேற்கொண்டது.

இதில், 20 ஆயிரத்து 453 குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதால், அவற்றை உடனடியாக இடித்து, மறு கட்டுமானம் மேற்கொள்ள வேண்டும் என தொழில்நுட்ப வல்லுநர் குழு, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திடம் அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com