குடும்ப நிகழ்ச்சிக்கு அழைத்த ஓனர்..சீர்வரிசையோடு வந்த வடமாநிலத்தவர்கள்!-நெகிழ்ச்சி சம்பவம்

குடும்ப நிகழ்ச்சிக்கு அழைத்த ஓனர்..சீர்வரிசையோடு வந்த வடமாநிலத்தவர்கள்!-நெகிழ்ச்சி சம்பவம்
குடும்ப நிகழ்ச்சிக்கு அழைத்த ஓனர்..சீர்வரிசையோடு வந்த வடமாநிலத்தவர்கள்!-நெகிழ்ச்சி சம்பவம்

தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி கிளம்பியுள்ள நிலையில், பூவிருந்தவல்லி அருகே நிகழ்ச்சி ஒன்றில் தன்னிடம் பணி புரியும் வட மாநில தொழிலாளர்களை குடும்ப உறுப்பினராக பாவித்து அவர்களுக்கு முக்கியத்துவம் அளித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்களது உரிமையாளரை சகோதரன் போல் பாவித்து சீர் வரிசை தட்டுடன் வந்த வடமாநில தொழிலாளர்கள், விழாவிற்கு வந்திருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.

சென்னை பூவிருந்தவல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர்கள் ராஜாமணி-பத்மாவதி. இவர்களின் மகள் விஷ்ணு பிரியாவின் பூப்புனித நீராட்டு விழா, பூந்தமல்லி அருகே தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கட்டுமான நிறுவன உரிமையாளரான ராஜாமணி, தன்னிடம் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்களை உறவினர்களாக பாவித்து பத்திரிக்கை வைத்து, அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில் அழைப்பை ஏற்றுக்கொண்ட 50க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள், சகோதரத்துவ எண்ணத்தை வெளிகாட்டும் வகையில், கையில் சீர்வரிசை தட்டுகளுடன் வந்து விழாவையே அசத்தினர். இது விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இதைத்தொடர்ந்து உறவினர்கள் போல் பெண்ணிற்கு நலங்கு வைத்து, மலர்தூவி ஆசீர்வாதம் அளித்தனர். அதேபோல் விழாவிற்கு வந்திருந்த அனைத்து வட மாநில தொழிலாளர்களும் முக்கியத்துவத்துடன் வந்திருந்தவர்களுக்கு உணவை பரிமாறி அன்பை வெளிப்படுத்தினர். தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரவி வரும் நிலையில், வட மாநில தொழிலாளர்களை உறவினர் போல் பாவித்து அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது வரவேற்பை பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com