நான்கு புதிய குடும்ப நல நீதிமன்றங்கள் திறப்பு

நான்கு புதிய குடும்ப நல நீதிமன்றங்கள் திறப்பு

நான்கு புதிய குடும்ப நல நீதிமன்றங்கள் திறப்பு
Published on

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் 4 புதிய குடும்ப நல நீதிமன்றங்களை தலைமை நீதிபதி இந்திரா பானார்ஜி திறந்து வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில் நீதிபதிகள், ரமேஷ், மணிகுமார், கிருபாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியைத் தொடர்ந்து 4 நீதிமன்றங்களுக்கு நீதிபதியாக நியமிக்கப்பட்ட ஸ்ரீதர், ரவி, பார்த்திபன், லீலாவதி ஆகியோர் வழக்குகளை விசாரிக்க துவங்கினர். சென்னையில் முதன்மை குடும்ப நீதிமன்றம் மற்றும் 3 கூடுதல் குடும்ப நல நீதிமன்றங்கள் மட்டும் இருப்பதால், விவாகரத்து வழக்குகள் 10 ஆண்டுகளுக்கு மேலாக தேங்குவதாக வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதனையடுத்து நீதிபதி கிருபாகரன் உத்தரவின்படி புதிய குடும்ப நல நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com