\
சென்னை: கழிவுநீர் தேங்கிய சாலை பள்ளத்தில் தவறி விழுந்து முதியவர் உயிரிழப்பு

சென்னை: கழிவுநீர் தேங்கிய சாலை பள்ளத்தில் தவறி விழுந்து முதியவர் உயிரிழப்பு

சென்னை: கழிவுநீர் தேங்கிய சாலை பள்ளத்தில் தவறி விழுந்து முதியவர் உயிரிழப்பு
Published on

சென்னையில் கழிவுநீர் தேங்கியிருந்த நிலையில் சாலையில் இருந்த பள்ளத்தில் தவறி விழுந்து முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் நரசிம்மன். இவர் கார் ஓட்டுநராக இருந்து வந்தார். இன்று பணிக்கு செல்வதற்காக கோடம்பாக்கம் மேம்பாலத்தின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அங்கு கழிவுநீரும் மழைநீரும் சாலையோரமாக தேங்கியிருந்தது. அதேபோல் பாதாள சாக்கடையும் பாதி திறந்த நிலையில் இருந்தது.

இதையறியாமல் நடந்து வந்த நரசிம்மன் தவறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக நுங்கம்பாக்கம் போலீசார் முதற்கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர்.  சாலையில் சாக்கடையை சரியாக மூடாததுவே இதற்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சமீபத்தில் சென்னை முகப்பேரில் கால்வாயில் தவறி விழுந்து தாய், மகள் உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒரு துயரம் அரங்கேறியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com