மகளின் திருமணத்திற்காக காந்தி வேடமிட்டு பிச்சை எடுத்த முதியவர்

மகளின் திருமணத்திற்காக காந்தி வேடமிட்டு பிச்சை எடுத்த முதியவர்

மகளின் திருமணத்திற்காக காந்தி வேடமிட்டு பிச்சை எடுத்த முதியவர்
Published on

முதியவர் ஒருவர் தனது மகளின் திருமணத்திற்காக மகாத்மா காந்தி வேடம் அணிந்து பிச்சை எடுத்த சம்பவம் பலரை வேதனையடைய செய்துள்ளது.

சித்தூர் மாவட்டம் யாத்மூரி பகுதியை சேர்ந்தவர் ரான்ஜி. இவருக்கு 3 மகள்கள் இருப்பதாகவும், இவரது மனைவி இறந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தனது மகள்களின் திருமணத்திற்காக மகாத்மா காந்தி வேடம் அணிந்து பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பிச்சை எடுத்து வருவதாக தெரிகிறது.

இன்று குடியாத்தம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையம் எதிரில் காந்தி போல் வேடம் அணிந்த முதியவர் ஒருவர் நின்று கொண்டு எதிரில் பாத்திரம் வைத்திருந்தார். பேருந்து நிலையத்திற்கு வருவோர் அவரை பார்த்து சில்லரை போட்டு சென்றனர்.  

இதனை பார்த்த புறக்காவல் நிலைய காவலர்கள் முதியவரை அழைத்து விசாரித்த போது மகள்களின் திருமணத்திற்காக பணம் சேர்க்க பிச்சை எடுப்பதாக அவர் கூறினார். பின்னர் அவரிடம் காவலர்கள், தேசத்திற்காக பாடுபட்ட மகாத்மா காந்தி வேடம் அணிந்து பிச்சை எடுப்பது தவறு எனக் கூறி முதியவரை தனது சொந்த ஊருக்கு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

தகவல்கள் : ச.குமரவேல்,செய்தியாளர்- வேலூர்.
 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com