’இங்கு எதுக்கு வருகிறீர்கள்’ மனு கொடுக்கவரும் மாற்றுத்திறனாளிகளை விரட்டியடிக்கும் அலுவலர்?

’இங்கு எதுக்கு வருகிறீர்கள்’ மனு கொடுக்கவரும் மாற்றுத்திறனாளிகளை விரட்டியடிக்கும் அலுவலர்?
’இங்கு எதுக்கு வருகிறீர்கள்’ மனு கொடுக்கவரும் மாற்றுத்திறனாளிகளை விரட்டியடிக்கும் அலுவலர்?

மனு அளிக்க வரும் மாற்று திறனாளிகளை அலுவலகத்திற்கே வர கூடாது என நாமக்கல் மாவட்ட மாற்று திறனாளி அலுவலர் விரட்டி அடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தின் பின்புறம் உள்ள கூடுதல் அரசு கட்டிட வளாகத்தில் மாவட்ட மாற்று திறனாளிகளின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இன்று திங்கட்கிழமை என்பதால் மாற்று திறனாளிகள் பலர் உதவி தொகை, மாற்று திறனாளி அடையாள அட்டை, அரசின் நலத்திட்டங்கள் வழங்க கோரி மாற்று திறனாளிகள் அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக பொதுமக்கள் யாரையும் அலுவலத்திற்குள் அனுமதிக்காமல் மாவட்ட மாற்று திறனாளி அலுவலர் ஜான்சி மற்றும் அலுவலர்கள் மனுக்களை பெற்றுக்கொண்டனர். இதில் மனு அளிக்க வந்த பலரிடம் மனுக்களை வாங்காமல் இங்கு எதுக்கு வருகிறீர்கள், வாரந்தோறும் பேப்பரை தூக்கி கொண்டு வந்து விடுகிறீர்கள், இங்கிருந்து வெளிபே செல்லுங்கள் எனக்கூறி ஜான்சி அனைவரையும் விரட்டி அடித்ததாக கூறப்படுகிறது. இந்த காட்சிகள் அங்கிருந்தவர்களை அதிர்ச்சி அடைய செய்தது.

இதுகுறித்து மாவட்ட மாற்று திறனாளி அலுவலர் ஜான்சியிடம் கெட்டபோது, “மாற்று திறனாளிகள் அதிகளவு வருவதால் நுழைவாயிலில் நானே அமர்ந்து பதில் அளித்து வருகிறேன். யாரையும் விரட்டி அடிக்கவில்லை” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com