\
அக்டோபர் மாத ஊரடங்கு இன்றுடன் நிறைவு.. புதிய தளர்வுகளை அறிவிக்கிறது தமிழக அரசு.!

அக்டோபர் மாத ஊரடங்கு இன்றுடன் நிறைவு.. புதிய தளர்வுகளை அறிவிக்கிறது தமிழக அரசு.!

அக்டோபர் மாத ஊரடங்கு இன்றுடன் நிறைவு.. புதிய தளர்வுகளை அறிவிக்கிறது தமிழக அரசு.!
Published on

தமிழகத்தில் பொதுமுடக்கம் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், கூடுதல் தளர்வுகள் தொடர்பான அறிவிப்பு வெளியாகவுள்ளது.

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கடந்த மார்ச் 25ம் தேதி முதல் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, பல தளர்வுகளுடன் இன்னும் அமலில் உள்ளது. தமிழகத்தில் அரசு அறிவித்த ஊரடங்கு இன்றுடன் முடிவடைகிறது. 

அதேநேரம், பொதுமக்களின் வசதிக்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தளர்வுகளுடன் புதிய தளர்வுகள் அறிவிப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 28 ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார். 

அப்போது அவர்கள் முன்வைத்த ஆலோசனையின் அடிப்படையில் முதலமைச்சர் இன்று புதிய தளர்வுகளை அறிவிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. திரையரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், கடற்கரை, உயிரியல் பூங்காக்கள், சுற்றுலா தளங்கள் ஆகியவற்றை திறக்க அனுமதி அளிக்கப்படுமா என்பது இன்று தெரியவரும்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com