“எங்கள் மகள் தற்கொலை செய்துக் கொள்ளவில்லை” - மாலினி பெற்றோர் புகார்

“எங்கள் மகள் தற்கொலை செய்துக் கொள்ளவில்லை” - மாலினி பெற்றோர் புகார்
“எங்கள் மகள் தற்கொலை செய்துக் கொள்ளவில்லை” - மாலினி பெற்றோர் புகார்

கோவை அரவிந்த் கண் மருத்துவமனை கல்லூரியில் மாலினி என்ற மாணவி, நேற்று தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவத்தில் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. 

திருப்பூர் மாவட்டம்  உடுமலைபேட்டையை சேர்ந்தவர் மணிகண்டன், சைலஜா தம்பதியினர். இவர்களது மகள் மாலினி கோவை அவினாசி சாலையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனையில் மூன்றாமாண்டு நர்சிங் பயிற்சி பெற்று வருகிறார். மருத்துவமனை விடுதியில் தங்கியிருந்த மாலினி தனது அறையில் நேற்று மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. உடலை கைப்பற்றி பீளமேடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், மாலினியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து பீளமேடு காவல்நிலையத்தில் வினவிய போது உறவினர்கள் போதிய ஒத்துழைப்பு நல்கவில்லை என்றும் பிரேத பரிசோதனைக்கு பின்னரும் விசாரணைக்குப் பின்னருமே மாலினியின் இறப்புக்கான காரணம் குறித்தும் தெரிவிக்க முடியும் என்றனர். இதனிடையே மாலினியின் உடலை காண காவல்துறையினர் இதுவரை அனுமதிக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும் தனது மகளை பத்து தினங்களுக்கு முன்னர்தான் சந்தித்து சென்றதாகவும் அண்மையில் தொலைபேசியில் பேசும் போதும் நன்றாகதான் இருந்தார் என்று தெரிவிக்கும் அவரது தாய் சைலஜா, மாலினி தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை என்கிறார். 

இறப்பு குறித்தும் சரிவர பெற்றோரிடம் தெரிவிக்காமல் அவசரம் அவசரமாக உடலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துவிட்டதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். பீளமேடு காவல்துறையினர் புகாரை அவர்கள் விருப்பத்திற்கு மாற்றி எழுதுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். தனது மகளின் இறப்பு குறித்து மாறிமாறி தகவல் சொல்வதால் தனக்கு மருத்துவமனை நிர்வாகம் மீது சந்தேகமாக உள்ளது என அவரது தாய் சைலஜா தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com