தமிழகத்தில் ஹிந்தி மொழி பேசத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை 50% வரை அதிகரித்துள்ளதாக அண்மையில் வெளியிடப்பட்ட புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.
2001 ஆம் ஆண்டில் இருந்ததை காட்டிலும் 2011 இல் ஹிந்தி தெரிந்த தமிழர்களின் எண்ணிக்கை 50% அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது. 2001ம் ஆண்டு ஹிந்தி தெரிந்த தமிழர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 90 ஆயிரத்து 50 ஆக இருந்த நிலையில் 2011ல் இது 10 லட்சத்து 32 ஆயிரத்து 41 ஆக அதிகரித்திருந்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகள் அதிகரிப்பும் பள்ளிகளில் 2 அல்லது 3வது மொழிப்பாடமாக ஹிந்தியை கற்பவர்கள் அதிகரித்ததுமே, அம்மொழி தெரிந்தவர்கள் எண்ணிக்கை உயர காரணம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

