என்எல்சி நிர்வாகமே மின்சாரம் வழங்கு: தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

என்எல்சி நிர்வாகமே மின்சாரம் வழங்கு: தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
என்எல்சி நிர்வாகமே மின்சாரம் வழங்கு: தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

நெய்வேலி அருகே மின்சாரம் வழங்கக் கோரி பொதுமக்கள் தீப்பந்தம் ஏந்தி இரண்டாவது நாளாக போராட்டம் நடத்தினர்.

கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பம் பகுதியில் உள்ள ஐடிஐ நகர், திருவள்ளுவர் நகர், சிவாஜி நகர், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 40 ஆண்டாக வசித்து வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு என்எல்சி நிறுவனத்தின் சார்பில் மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 17 நாட்களாக அப்பகுதிக்கு வழங்கப்பட்டு வந்த மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் என்எல்சி நிறுவனம், தடையில்லா சான்று வழங்கினால் தமிழக அரசு மின்சாரம் வழங்கும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து நேற்று நள்ளிரவு என்எல்சி நிறுவனம் தடையில்லா சான்று வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து பொதுமக்கள் தீப்பந்தங்கள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com