\
பகலில் சமையல் வேலை; இரவில் திருட்டு - சிசிடிவி மூலம் சிக்கிய கொள்ளையன்

பகலில் சமையல் வேலை; இரவில் திருட்டு - சிசிடிவி மூலம் சிக்கிய கொள்ளையன்

பகலில் சமையல் வேலை; இரவில் திருட்டு - சிசிடிவி மூலம் சிக்கிய கொள்ளையன்
Published on: 

கடை சட்டர்களை உடைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கொள்ளையனை போலீசார் மாறுவேடத்தில் சென்று கைது செய்தனர். 

கடந்த 10 ஆம் தேதி சென்னை அண்ணாநகர் சிந்தாமனி சிக்னலிலுள்ள ஜெராக்ஸ் கடை மற்றும் திருமங்கலத்தில் உள்ள சில கடைகளின் சட்டர்களை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. 

இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் கடைகளை சுற்றியுள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் சோதனை செய்தனர். இதைத்தொடர்ந்து திருமங்கலத்தில் பிரபல ஓட்டலில் சமையல்காரராக வேலை பார்த்து வந்த சிவா என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். பிறவியிலேயே வாய்பேச முடியாத இவர் மீது ஏற்கனவே பல கொள்ளை புகார் இருந்து வந்ததாகவும் கடந்த் 2016 ஆம் ஆண்டுதான் சிறையில் இருந்து வெளியே வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். 

கடந்த 3 ஆண்டுகளில் இதேபோல் பல்வேறு இடங்களில் இவர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com