\
எழுவர் விடுதலை: ஆளுநரின் ஆவணம் கிடைத்த பிறகே அடுத்த நடவடிக்கை - அமைச்சர் சி.வி.சண்முகம்

எழுவர் விடுதலை: ஆளுநரின் ஆவணம் கிடைத்த பிறகே அடுத்த நடவடிக்கை - அமைச்சர் சி.வி.சண்முகம்

எழுவர் விடுதலை: ஆளுநரின் ஆவணம் கிடைத்த பிறகே அடுத்த நடவடிக்கை - அமைச்சர் சி.வி.சண்முகம்
Published on

7பேர் விடுதலை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தாக்கல் செய்த ஆவணம் கிடைத்த பிறகே அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் 7 பேரின் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க தமிழக கவர்னருக்கு உரிமை இருக்கிறது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக குடியரசுத் தலைவரே முடிவெடுப்பார் என கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து தமிழக அரசியலில் பல விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

இதையடுத்து 7 பேர் விடுதலை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தாக்கல் செய்த ஆவணம் தமிழக அரசுக்கு கிடைக்கவில்லை. ஆளுநரின் ஆவணம் கிடைத்த பிறகே அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com