‘நீட் விலக்கு மசோதா தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது’ : உள்துறை அமைச்சகம் 

 ‘நீட் விலக்கு மசோதா தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது’ : உள்துறை அமைச்சகம் 
 ‘நீட் விலக்கு மசோதா தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது’ : உள்துறை அமைச்சகம் 

நீட் விலக்கு மசோதா தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் உயர்நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது. 

தமிழ்நாடு மருத்துவ மற்றும் பல்மருத்துவ பட்ட படிப்புகளுக்கான சட்ட முன்வடிவு 2017 மற்றும் தமிழ்நாடு மருத்துவ மற்றும் பல்மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கான சட்ட முன்வடிவு 2017 ஆகிய இரு சட்ட முன்வடிவுகளும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி ஒன்றாம் தேதி கொண்டுவரப்பட்டது. 

இதற்காக குடியரசுத்தலைவரின் ஒப்புதலை பெற அப்போதைய ஆளுநர் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி அனுப்பி வைத்தார். இந்த இரண்டு மசோதாக்களுக்கும் ஒப்புதல் பெற்று தர வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியிடம் மனு அளித்திருந்தார். 

இதனிடையே 2017 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட சட்டத்துக்கு ஒப்புதல் பெறக்கோரி பிரின்ஸ் கஜேந்திரபாபு, தமிழ்நாடு மாணவர் பெற்றோர் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் 2 சட்ட மசோதாக்களையும் குடியரசுத்தலைவர் நிராகரித்துள்ளார் என மத்திய அரசு தகவல் தெரிவித்தது. இதையடுத்து சட்ட மசோதாக்கள் பெறப்பட்டது, நிராகரிக்கப்பட்ட தேதிகளுடன் அறிக்கையாக தாக்கல் செய்ய நீதிமன்றம் ஆணையிட்டது.

இந்நிலையில், நீட் விலக்கு மசோதா தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டதாக மத்திய உள்துறை துணைச்செயலாளர் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதில், 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் செப்டம்பர் 22 ஆம் தேதியே தமிழக அரசுக்கு கடிதம் 2 மசோதாக்களையும் திருப்பி அனுப்பிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு விசாரணை நாளை நடைபெற உள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com