'மாணவர்கள் பஸ் படிக்கட்டில் பயணித்தால்...’- ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அதிரடி சுற்றறிக்கை

'மாணவர்கள் பஸ் படிக்கட்டில் பயணித்தால்...’- ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அதிரடி சுற்றறிக்கை

'மாணவர்கள் பஸ் படிக்கட்டில் பயணித்தால்...’- ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அதிரடி சுற்றறிக்கை
Published on

மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்தால் காவல் நிலையம்/ காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்க வேண்டும் என  ஒட்டுனர், நடத்துனர்களுக்கு மாநகர போக்குவரத்து கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் நாளொன்றுக்கு 3,300 பேருந்துகளை பொதுமக்களின் தேவைக்காக இயக்கி வருகிறது. பயணிகளின் சேவைக்காக முக்கியப் பங்கு வகிக்கும் மாநகர பேருந்து சேவையில் படிக்கட்டுகளில் தொங்கியபடி பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணம் செய்வது, மேற்கூரையில் ஆபத்தான முறையில் பயணம் போன்றவை பல வழித்தடத்தில் அவ்வபோது நடக்கிறது.



இதை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய மாணவர்கள் இதுபோன்று பயணித்தால் காவல் நிலையத்திற்கும், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக ஒட்டுனர், நடத்துனர் தகவல் தெரிவிக்க வேண்டும் என மாநகர போக்குவரத்து கழக மேலான் இயக்குனர் அன்பு ஆபிரகாம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்திட கவனமாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிக்கலாமே: பில்கிஸ்பானோ வழக்கு குற்றவாளிகள் விடுதலை: மத்திய அமைச்சரின் ஆதரவும், மஹுவாவின் எதிர்ப்பும்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com